Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Tuesday, 1 July 2014

கணினி பற்றிய டிப்ஸ் சில... இதோ உங்களுக்காக...!

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள்.


நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.


குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fontsதேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.


டாஸ்க் பார் / டூல் பார்

பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.

இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.

டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த...

கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது.

இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.

ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று.

அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.
No comments

Saturday, 22 March 2014

கவனம்... லேப்டாப் மற்றும் கணினி... - உங்கள் "கண்"மணி..!



கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' பாதிப்பு ஏற்படும்.

கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், காய்ந்து போதல், கண்ணைச் சுற்றி வீக்கம், இறுக்கமாக இருப்பது இவையெல்லாம் அறிகுறி.

இதற்கு முக்கிய காரணம்... கண் சிமிட்டுவது குறைவதுதான்.


இதனால், கண்ணீர் சுரப்பு குறைந்து, கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகிவிடுகிறது.

ஒரு மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் நேரம் போக, ஒரு நாளைக்கு சுமார் 10,080 முறை.. கண் சிமிட்ட வேண்டும்.

* மானிட்டர் மீது வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் குறைக்க, மானிட்டரின்மீது ஸ்பெஷன் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.

* உங்களுக்கு மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கவேண்டும்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, பிறகு எழுந்து கண்ணை நன்றாகக் கழுவிவிட்டு, திரும்பவும் வேலையை தொடங்குங்கள்.

* இடை இடையே மானிட்டரிலிருந்து கண்ணை திருப்பி, அருகில் ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள்.

* எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு அதிக‌ அசதி, சோர்வை தவிர்க்கலாம்.


(இதைப் படிக்கும்போதே... அட்லீஸ்ட் 24 முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சின்ட்ரோம்' பயம் தேவையில்லை)
No comments

Wednesday, 19 March 2014

உங்க செல்லுல போன் பண்ண பேலன்ஸ் இல்லையா..? இதோ உங்களுக்காக மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்..!

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில்.

 முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி.
ravi mar 7


இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ஒரு ரிட்டர்ன் கால் வரும். அப்புறம் உங்களுக்கு வேணுங்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசலாம்.

என்ன ஒண்ணு – கால் நடுவே ஒரு நிமிஷம் இருங்க, ஒரு கமர்ஷியல் பிரேக் விளம்பரத்துக்கு பிறகு பேசுங்கன்னு ஒரு விளம்பரம் வரும் அம்புட்டுதான். ( இது இந்தியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும் – ஆனா இது நம்ம நாக்டெல் கனடா / அமெரிக்கா மலேஷியாவுல உட்பட 18 நாடுகளில் 2010 வருஷத்தில இருந்து இருக்கு.

இதற்க்கு பேர் கால் பேக் சிஸ்டம் (call back system) ஆனா நாங்க சார்ஜுவோம் – இங்க ப்ரீ FREE – என்ஜாய் மக்களே. இங்க போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீ மிஸ் கால் கொடுத்து தொம்சம் பண்ணுங்க‌

 www.freekall.in
No comments

Monday, 17 March 2014

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்..!



வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது.          மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.

பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான்.

இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.

மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது.

மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் (மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப்பட்டிருக்கும்.

கம்ப்யூட்டர் விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் , எல்லாம் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படும்.

 அப்படியும் எதுவும் சரியாகவில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்கபடுகிறது.

எல்லாவ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்ககூடியது.

இணையதள முகவரி; http://www.make-everything-ok.com/
No comments

Sunday, 16 March 2014

ஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவது எப்படி..!



இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய நாட்களில், சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இணைய வழி மோசடி நடக்காமலிருக்கும் என உறுதிமொழியையும் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் தங்களுடைய அட்டைகளுக்கு கொடுத்து வருகின்றன.

என்னதான் அவர்கள் உறுதி கூறினாலும் இது போன்ற திருட்டுகள் இன்னும் குறைந்தபாடு இல்லைய, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே நமது பணத்தை நாம் தான் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் பாதுகாப்பு அம்சங்களை சரி வர பயன்படுத்தி கிரெடிட் கார்டு மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது நல்லது. இது பற்றி மேலும் அறிய பின்வரும் 8 டிப்ஸ்களை படியுங்கள்.

வருமுன் காப்பதே நல்லது' என்பது இந்த பிரச்சனைக்கு பொருத்தமான பழமொழியாகும். இணைய வழி வைரஸ்களில் இருந்து உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்க நினைத்தால், ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை நிறுவுவது நல்லது.

விண்டோஸ் மெயில் மற்றும் அவுட்லுக் போன்ற வெப் பிரௌஸர்கள் மற்றும் ஈமெயில் முகவர்கள் ஆகியவற்றை அப்டேட் ஆக வைத்திருப்பது அவசியமாகும். பிஷ்ஷிங் (Phishing) மற்றும் மால்வேர் (Malware) போன்றவற்றில் இருந்து உங்களுடைய கணிணியை பாதுகாக்கக் கூடிய முழுமையான ஆன்ட்டி-வைரஸை தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் இணைய தளங்கள் வழியாக பணம் செலுத்துவது நல்லது. அவர்களுடைய அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் பிற ஆவணங்களை சேகரித்து அவர்களைப் பற்றி உறுதி செய்து கொள்வது அடுத்த படியாகும்.

ஏதாவதொரு தளம் நம்பிக்கையை தரவில்லையென்றால், அதை உபயோகிக்க வேண்டாம். PayPal மற்றும் AlertPay ஆகிய தளங்கள் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையானதாக உள்ளது. eBay போன்ற இணைய வழியாக பெருமளவு வணிகம் செய்யும் தளங்கள் பைசா பே வழிமுறை (paisa pay option) போன்ற மிகவும் பாதுகாப்பான வழிமுறையை கொடுத்து, நீங்கள் பொருட்களை வாங்க உதவுகின்றன.

பாதுகாப்பான தளங்களில் மட்டுமே உங்களுடைய கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரௌசர் விண்டோவின் கீழ் வலதுபக்கத்தில் பேட்லாக் குறியீட்டை (Padlock Symbol) எப்பொழுதும் கவனித்து வாருங்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் இணைய தளம் 'https:\' என்று தொடங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான விஷயமாகும்! ஊங்களுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் பொருட்களான டேப்லட்ஸ் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை செய்து வாருங்கள். பொது இடங்களில் இருக்கும் கணிணிகள் பொது நூலகங்களைப் போன்றவை, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம், படிக்கலாம். பொது இடங்களில் உள்ள பெரும்பாலான கணிணிகள் நமது பயன்பாட்டு பெயர் மற்றும் கடவுச் சொற்களை சேமித்து வைக்கும் குக்கிகளை கொண்டுள்ளன. இதனால் நமது இரகசியமான தகவல்கள் எளிதில் அம்பலமாகி விடுகின்றன.

மேலும், பாதுகாப்பான வை-ஃபை இணைப்பு மற்றும் கடவுச் சொல் வழியாக உங்களுடைய இணைய சேவை இணைக்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிஷ்ஷிங் தளங்கள் ஜாக்கிரதை! இணைய வழியில் பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த தளத்தின் ஆவணங்களை சரி பார்க்கவும். இந்த ஆவணங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஆவணங்கள் இருப்பதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க முடியும். வெள்ளை மற்றும் பச்சை நிற கொடியுடைய தளங்களை எப்பொழுதும் தேர்ந்தெடுக்கவும். பச்சை நிற ஆவணங்கள் கொண்ட தளங்கள் அதிகமான பாதுகாப்பையும், உரிமையை உறுதிப்படுத்தம் தன்மையும் கொண்ட தளமாகவும் உள்ளன.

நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் மின்னஞ்சலுக்கு வரும் பிஷ்ஷிங் மெயில்கள். இது போன்ற மெயில்களை உங்களுடைய இன்பாக்ஸில் வைத்திருக்க வேண்டாம். இந்த வகை இமெயில்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையோ அல்லது கிரெடிட் கார்டு விபரங்கள் அல்லது ஒரு கிளிக் செய்து நீங்கள் செல்லும் இணைய தளத்தில் உங்களுடைய பயன்பாட்டு பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) சரி பார்க்க சொல்லவோ அல்லது பிற விபரங்களை கேட்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை முடிந்த வரையிலும் தவிர்த்து விடுவதும், அழித்து விடுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும்.

உங்களுடைய பாஸ்வேர்ட் அல்லது கடவுச் சொல்தான் உங்களைப் பற்றி விபரங்களுக்கான சாவியாகும். இன்றைய நாட்களில் அனைத்து வங்கிகளும் மிகவும் உறுதியான மற்றும் பாதுகாப்பான தற்காலிக கடவுச் சொற்களை (Instant passwords) உங்களுடைய மொபைலுக்கு அனுப்பி அதன் வழியாக தங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களை நடத்தச் செய்கின்றன. இந்த வசதியை உங்களுடைய கணக்கிற்கும் ஏற்படுத்த நீங்கள் உறுதி செய்யுங்கள்.

இறுதியான தகவலாக இருந்தாலும், மிகவும் உறுதியான தகவலாக இருப்பது உங்களுடைய கணக்கினை நீங்கள் அவ்வப்போது பரிசோதித்து கவனித்து வருவதாகும். இவ்வாறு செய்யும் போது உங்களுடைய அட்டையை கடைசியாக எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதை கவனித்து வர வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கும் போது, உங்களுக்கு பரிச்சயமில்லாத பரிமாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அது புலனாகி விடும். இவ்வாறு தவறான பரிமாற்றங்கள் ஏதும்இருந்தால் உடனடியாக உங்களுடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தை அணுகி தகவல் தரவும்.

நீங்கள் இவ்வாறாக உங்களுடைய அட்டை, இரகசிய எண் அல்லது இணைய வழி கடவுச் சொற்கள் ஆகிய மோசடிகளுக்குள்ளான பின்னர், உடனடியாக தகவல்களை கொடுத்து விட்டால் கூட, உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
No comments

முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம் உங்களுக்கு வேணுமா..?



தென் கொரியாவானது முழுமையான திரைப்படமொன்றை ஒரு செக்கனில்

பதிவிறக்கம் செய்யக்கூடிய 5 ஆம் தலமுறை கையடக்கத்தொலைபேசி

இணையத்தள  சேவையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி ’5 ஜி’ என்ற ஐந்தாம் தலைமுறை கையடக்கத்
தொலைபேசி

சேவைகளில் 900 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முதலீடு

செய்துள்ளது.

இந்த சேவையை பரீட்சார்த்தமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும்

அதனை 2020 ஆம்  ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக ரீதியாக செயற்படுத்தவும்

திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி தொழில்நுட்பமானது ஒரு செக்கனில் 800 மெகா பைட் அளவான

திரைப்பட கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்பாட்டாளருக்கு

அனுமதிக்கிறது.

இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.

No comments

Thursday, 13 March 2014

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்..! அதிர்ச்சி வீடியோ...



என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்……

இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி படம்பிடிக்க ஆரம்பிக்கின்றார், திரையைப் பார்த்தால்!!!! ஐயோ அங்கே தெரிபவர்கள் எல்லோரும் ஆடையில்லாமல் இருக்கின்றனர், போதாக்குறைக்கு ஸ்கூட்டரில வாறவன் கூட ஆடையில்லாமலே தெரிகிறான் என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,

அடக் கருமாந்திரமே தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லி கடைசில நம்மள ஆதிவாசிகளாக்கிப்போட்டானுகளே படுபாவிங்க..

இப்படி உன்மையாகவே ஒரு ஆப்பிளிக்கேசன் இருப்பதாக எமக்கு ஒருதகவல் கிடைத்திருக்கின்றது ஆனால் அந்த அப்பிளிக்கேசன் இதுதானா என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.
No comments

Sunday, 9 March 2014

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம்..!



காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்

குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.
No comments

Friday, 7 March 2014

மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்..!

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில்.

 முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி.
ravi mar 7


இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ஒரு ரிட்டர்ன் கால் வரும். அப்புறம் உங்களுக்கு வேணுங்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசலாம்.

என்ன ஒண்ணு – கால் நடுவே ஒரு நிமிஷம் இருங்க, ஒரு கமர்ஷியல் பிரேக் விளம்பரத்துக்கு பிறகு பேசுங்கன்னு ஒரு விளம்பரம் வரும் அம்புட்டுதான். ( இது இந்தியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும் – ஆனா இது நம்ம நாக்டெல் கனடா / அமெரிக்கா மலேஷியாவுல உட்பட 18 நாடுகளில் 2010 வருஷத்தில இருந்து இருக்கு.

இதற்க்கு பேர் கால் பேக் சிஸ்டம் (call back system) ஆனா நாங்க சார்ஜுவோம் – இங்க ப்ரீ FREE – என்ஜாய் மக்களே. இங்க போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீ மிஸ் கால் கொடுத்து தொம்சம் பண்ணுங்க‌

 www.freekall.in
No comments

Tuesday, 4 March 2014

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?



Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது.

இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. எப்படி என்று பார்ப்போம்.

முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.

நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.
எப்படி சம்பாதிப்பது?


Step – 1

ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.


Step – 2

இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால் ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”


Step – 3

இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.


Step – 4

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும்.

இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.


Step – 5

முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.


Step – 6

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.

அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள்.

தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.

Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது]

இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.

இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும் Overlay in-video ads - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம் TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.


எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் ?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.
கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.

ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.
No comments

Monday, 3 March 2014

Data Card இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி..?




நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/

உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

 சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.
No comments

மெமரி கார்டு பார்மேட் ஆகலையா...? - இதப்படிங்க..!



இன்றைக்கு மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம்.

மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது.

அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம்.

இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான்.

காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை.

காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை.

மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும்.

எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.

இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது.


No comments

Sunday, 2 March 2014

மொபைலின் முழு வரலாறு இதுதாங்க...!



இன்றைக்கு மொபைல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனைவரும் லேன்ட்லைன் போனில் ஹலோ ஹலோனு கத்திக் கொண்டு இருந்திருப்போம்.

மேலும் லேன்ட்லைன் போனின் பில்லை பார்த்து மயக்கம் அடைந்தவர்கள் ஏராளம் உண்டு தமிழ்நாட்டில்.

அவையனைத்தையும் இன்று உடைத்து லேன்ட்லைன் என்றால் என்ன என்று கேட்கப் போகும் தலைமுறை வர இன்னும் தூரமில்லை எனலாம் இதற்கு முதற்காரணம் மொபைல் தான்.

இன்று ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920
இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது

1947
ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1955
காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1969
பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973
மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979
ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984
விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989
மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991
அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992
மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996
மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000
இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001
வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006
மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007
ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2008
டச் ஸ்கிரின் மொபைல் வந்து கலக்கியது.

2010
ஆண்ட்ராய்டு மொபைல் உலகை தனதாக்கியது.

2014
எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு மொபைல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
No comments

மார்ச் 3 முதல் பேஸ்புக் மசெஞ்சர் செயலிழப்பு..!



கணனிகளில் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மசெஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3ம் திகதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் போன் 8 கருவிகளில் பேஸ்புக் மசெஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


கணனிகளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது வலது பக்கத்தில் மசெஞ்சர் காணப்படும்.

மொபைல் போன்களில் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் தகவல்கள் பக்கத்திற்கோ அல்லது பேஸ்புக் மசெஞ்சர் என்ற மொபைல் சேவையைத் தரவிறக்கம் செய்தோ தகவல்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.


தற்போது மொபைல் கருவிகள் மூலமாக பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இதனால் வரும் மார்ச் 3ம் திகதி முதல் கணிப்பொறி விண்டோஸ் மூலமாக பேஸ்புக் மசெஞ்சர் பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது.


எனினும் தகவல் பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.
No comments

Saturday, 1 March 2014

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்..!

myColourScreen_001

தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம்.

தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது.



தரவிறக்கச் சுட்டி
No comments