Thursday 9 October 2014

எந்த பக்கம் வாக்கிங் போனால் உடலுக்கு நல்லது..? - எச்சரிக்கை ரிப்போர்ட்..!

13:36

Share it Please
மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், வாக்கிங் போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், வாக்கிங் போனாலே போதும்.

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, வாக்கிங் எனப்படும் நடைப்பயிற்சி.

தினமும், வாக்கிங் செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், இன்சுலின் சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்சனை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. வாக்கிங் செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது.

நடைப்பயிற்சியால் உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை. எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் டி நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.

பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை, நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், வாக்கிங் போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.

0 comments:

Post a Comment