Wednesday 8 October 2014

மாதத்துக்கு 4 முறைதான் ‘அது’ - ஒரு அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்..!

23:46

Share it Please
தாம்பத்யம் கணவன் மனைவி பந்தத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதும் கூடத்தான். அதே நேரத்தில் ஆரோக்கியமான தாம்பத்யம் உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்துகிறது. கணவன் மனைவி இடையே எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களை ரிலாக்ஸ் ஆக வைக்கும் ஒரு விஷயம் உள்ளதென்றால் அது நிச்சயமாக படுக்கையறை சமாசாரம்தான். அதனால்தான் நம்ம ஆட்கள், “புருஷன் பொண்டாட்டி தகராறு பொழுது சாஞ்சா சரியாப்போகும்” என்றார்கள். அதாவது, கணவன் மனைவி இடையேயான மன நெருக்கடியை, சண்டையை இரவு நெருக்கம் சரி செய்துவிடும் என்றார்கள். அதனால், இந்தியர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு தெய்வீகமான மரியாதை கொடுத்தார்கள்.

ஆனால், வெளிநாடுகளில் நிலைமை எப்படி உள்ளது? வேலை, பணம், தொழில் நெருக்கடி, இணையதளம் ஆகியவற்றில் தம்பதிகள் மூழ்கி விடுவதால், குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்து கொண்டிருக்கிறதாம். இதுகுறித்து இங்கிலாந்தில் வெளியாகும் ‘தி அப்சர்வர்’ இதழில் வெளியான சமீபத்திய சர்வே இது. அப்சர்வர் கொடுத்த செய்தி அப்படியே உங்களுக்காக…

“இங்கிலாந்தில் உள்ள மக்களிடையே தாம்பத்ய ஆர்வம் குறைந்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து தம்பதிகளில் பெரும்பாலானோர் வாரம் ஒரு முறை அல்லது மாதத்துக்கு நான்கு முறை என்ற அளவில்தான் உறவு வைத்துக் கொள்கின்றனர். நூறில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் பேர் மட்டுமே மாதம் முழுவதும் அல்லது 25க்கும் அதிகமான முறை உறவு வைத்துக் கொள்கின்றனர்.

2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறிய தம்பதிகள் எண்ணிக்கை 76 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அது 63 சதவீதமாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 13 சதவீதம் தம்பதிகள் தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை என்று கூறியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஏழுபேரில் ஒருவர் சாதாரண முறையில் உறவு கொண்டால், மற்றும் சிலர் இணையதளம் வழியான படங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.22 ஆண்களில் ஐந்து பேர் தாங்கள் விலை மாதுவிடம் சென்றதாக கூறுகின்றனர். ஆனால், 2008ல் இதே 22 சதவீதம் பேரில் நான்கு பேர் விலை மாதுவிடம் சென்றதாக ஒப்புக் கொண்டனர்.

இங்கிலாந்து பெண்களில் 53 சதவீதம் பேர் பலான கதைகள் படிப்பதில் ஆர்வமாக உள்ளனர். ஆண்களில் 76 சதவீதம் பேர் பலான படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஐந்தில் ஒரு பெண் 16 வயதுக்குள் கன்னித் தன்மையை இழக்கிறார். இதைவிட கொடுமை என்னவென்றால், இங்கிலாந்தில் ஒரு பெண் அல்லது ஆண் 10 செக்ஸ் பார்டனர்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.

நினைத்துப் பாருங்க மக்களே… நம்ம நாட்டை. நாம் எவ்வளவோ மேல். அதனால், வாழ்க்கையை கொண்டாடுங்க… மகிழ்ச்சியானதா மாத்திக்கோங்க… சிம்பிளா சொன்னா..கணவன், மனைவி உறவு எந்தளவுக்கு பிணைப்பாக உள்ளதோ, அந்தளவுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுதான் இந்த சர்வே சொல்ல வந்த உண்மை.

0 comments:

Post a Comment