Tuesday 7 October 2014

உறவுகளுக்குக் குட்-பை சொல்ல வைக்கும் படா பேஜாரான விஷயங்கள்..!

22:05

Share it Please
மொபைல், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று இந்த உலகில் தொழில்நுட்பங்கள் வளர வளர மக்களின் வாழ்க்கை முறை எளிதாகிக் கொண்டே போகிறது என்பது உண்மைதான். ஆனால், அதைவிட மோசமான அளவுக்கு மனித உறவு முறைகள் அதே தொழில்நுட்பங்களால் பாதிக்கப்பட்டும் இருக்கின்றன.

தொழில்நுட்பம் மட்டுமல்ல; மேலும் பல புதிரான விஷயங்கள் கூட மனித உறவுகளை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன. இருவருக்கு இடையில் உள்ள புரிந்துணர்தலில் சிறிது குழப்பம் ஏற்பட்டாலும் கூட, அது உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. தாழ்வு மனப்பான்மை, ஈகோ உள்ளிட்ட விஷயங்களும் இதற்குத் தூண்டு கோல்களாக இருக்கின்றன.

இதுபோன்ற பிரச்சனைகள் எந்த உறவில் ஏற்பட்டாலும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஓரளவு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்டால், அது விவாகரத்து வரை கூட சென்று, மீளவே முடியாத ஒரு நிலைக்குச் சென்று விடும்.

உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கும் சில கொடுமையான விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஏற்கனவே கூறியது போல், இது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் மனித உறவுகளை மிக மோசமாகப் பாதிக்கும் காரணிகளில் இதற்கு முக்கியப் பங்கு உள்ளது.

பெரும்பாலானவர்களுக்குத் தங்கள் அதிக உடல் எடையே உறவுக்குப் பகைவனாகி விடுகிறது. இன்னும் சிலருக்கு, எடை இல்லாமல் இருப்பதே பெரும் பிரச்சனையாகி விடுகிறது.

உங்களுக்கு வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும் ஆசை இருக்கலாம். ஆனால் உங்கள் பார்ட்னருக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. விளைவு, விரைவில் குட்-பை சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மொபைல் போனின் பிரம்மாண்டமான வளர்ச்சிகள் பெரும்பாலும் உறவுகளைச் சிதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. சாட்ஸ், வாட்ஸ் அப் போன்றவை எரியும் நெருப்பில் எண்ணெயைத் தான் ஊற்றிக் கொண்டிருக்கின்றன.

கணவன்-மனைவிக்கு இடையே இந்தக் காலத்தில் இது மிக மிக முக்கியமான பிரச்சனையாக ஆகிவிட்டது. அதிலும், உண்டாகிவிட்ட கருவைக் கலைப்பதா வேண்டாமா என்பதில் ஏற்படும் பிரச்சனைகளைச் சொல்லி மாளாது.

ஒருவருடைய உறவில் பாதுகாப்பு இல்லாதது போன்ற ஒரு சிறு சந்தேகம் வந்து விட்டாலே போதும், அது இருவருக்குமிடையிலான உறவுக்கு முற்றுப் புள்ளியை வைத்து விடும்.

ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் நம்பிக்கை காற்றில் பறக்கும் போது, அந்த உறவு மிக எளிதில் ஒட்ட முடியாத அளவுக்கு உடைந்து விடும்.

ஒருவர் வாழ்க்கையில் முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களைத் தோண்டித் துருவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால் மற்றவருக்கு ஏற்படும் காயத்தை ஆற்றவே முடியாது. இதனால் இருவரின் உறவும் உடனடியாகத் துண்டிக்கப்படும்.

முன் விரோதம், உட்பகை என்று ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் இந்த உணர்வு, உறவுக்குப் பெரும் பகைவனாகும். ஆனால் இதை ஜெயிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி காண்கிறார்கள்.

மன அழுத்தம், இதுவும் அனைவருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது ஏற்படும் ஒரு உணர்வுதான். ஆனால் இதை பாஸிட்டிவ்வாகக் கையாளாவிட்டால், இருவருக்கிடையே உள்ள உறவுக்கு சங்குதான்!

கம்யூனிகேஷன் கேப் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருவர் தன் பிரச்சனையைப் பற்றி தன் பார்ட்னரிடம் மனம் திறந்து பேச வேண்டும். அப்படி இல்லாமல், தன் மனத்திற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தால், பார்ட்னர் குட்-பை சொல்லிவிட்டுப் போய் விடுவார்.

இருவர் அடிக்கடி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் அவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்! ஆனா, அதைத் தைத்துப் போட்டுக் கொண்டால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

0 comments:

Post a Comment