Sunday, 16 March 2014

ஹன்சிகாவால் வாலு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு...!

10:19

Share it Please


வாலு படத்தினை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை. தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னைகளாக வந்து கொண்டிருக்கிறது.


 எல்லா பிரச்னைகளையும் சமாளித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்களில் ஹன்சிகா ஒரு பிரச்னையைக் கிளப்பியுள்ளதாகப் பேசப்ப்படுகிறது.


சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தின் மூலமே இணைந்து நடிக்கும் வாய்ப்பினையும், அதன் மூலம் சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும்
காதலர்களாக மாறினர்.


எவ்வளவு வேகத்தில் காதல் வந்ததோ அதை விட வேகமாக காதல் முறிவும் ஏற்பட்டது.

இந்நிலையில் வாலு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, இறுதியாக ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.


 இப்பாடல் காட்சியினை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் விஜய் சந்தர் முடிவெடுத்து, அதனை ஹன்சிகாவிடம் கூற, ஹன்சிகா தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறுகிறாராம்.


 அப்பாடல் காட்சியினை உள்ளூரிலேயே படம்பிடிக்குமாறும் வற்புறுத்துகிறாராம்.

வெளிநாடு வந்தால் எங்கே சிம்பு மீண்டும் தன்னை வற்புறுத்துவாரோ என்ற பயம்தான் ஹன்சிகாவின் இந்த முடிவிற்குக் காரணம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

0 comments:

Post a Comment