Wednesday, 5 March 2014

விஜய் அசினுக்கு இடையில் என்னதான் நடக்குது...?

10:44

Share it Please


எம்.குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அசின்.

 முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை மயக்கி, கோலிவுட்டின் அதிரடி முன்னணி நடிகையாகவும் மாறினார்.

அதன் பின்னர் தமிழின் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், கமல் ஆகியோருடன் நடித்தார்.

குறிப்பாக இளைய தளபதியுடன் சிவகாசி, போக்கிரி மற்றும் காவலன் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்தார்.

எல்லாப் படங்களுமே பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்ததுடன், அசினுக்கும் நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தித் தந்தன.

ஆனால் தமிழ்ப் படங்களிலிருந்து அப்படியே வடக்கு நோக்கிச் சென்று தெலுங்குப் படங்களிலும், பின்னர் பாலிவுட்டிலும் கால் பதித்தார் அசின்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர் கானுடன் நடித்தார்.

அதன்பிறகு பாலிவுட்
வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தார். சல்மான்கானுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியதைப்போலவே பாலிவுட்டிலும் முன்னணிக் கனவுகள் கண்டார். ஆனால் பாலிவுட்டில் அவரது கனவு பலிக்கவில்லை.

 பாலிவுட்டில் வாய்ப்புக்களை இழந்ததுடன், தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகிலும் வாய்ப்புக்களை இழந்துள்ளார்.

இதற்கிடையில் இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருடன் ஜோடியாக நடிப்பதற்குத் தூதனுப்பினாராம்.

ஆனால் விஜய் அதனை
மறுத்துவிட்டதாகக் கூறியதுடன், இனிமேல் அசினுடன் ஜோடியாக எந்தப் படத்திலும் நடிக்கும் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளாராம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்க முதலில் அசினுடன் பேசியதாகவும், ஆனால் பாலிவுட்டில் பிசியாக இருந்த அசின் விஜயுடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதற்குப் பழி வாங்கவே விஜய் தற்பொழுது இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் வதந்திகள் பரவியுள்ளன.

0 comments:

Post a Comment