Thursday, 13 March 2014

டை அடிக்கமாட்டேன்...வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிப்பேன் - அதிர்ச்சியில் கௌதம்

01:29

Share it Please


வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்துள்ளார்.

மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜீத் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார்.

இனி வரும் படங்களிலும் பெரும்பாலும் தனது ஒரிஜினல் தோற்றத்திலேயே வர முடிவு செய்திருக்கிறாராம்.

இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,இனி வரும் படங்களில் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

இனியும் கல்லூரி மாணவராக, டூயட் பாடும் இளைஞனாக நடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

ஆனாலும் தனது  கதைக்கு ஏற்ப தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார்.

சமீபகாலமாக கவுதம் மேனன் படத்துக்காக ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால் இது 6 பேக் அல்லது 8 பேக் உடற்கட்டு வைத்துக்கொள்வதற்காக அல்ல. இது ஆக்ஷன் படம் என்பதால் அதற்கு ஏற்ப தனது உடற்கட்டை வலிமைப்படுத்திக்கொள்ள உள்ளார்.

ஒரு சில கிலோ எடையும் குறைக்கிறார் என்றனர். 

0 comments:

Post a Comment